ராமநாதபுரத்தில் புதை சாக்கடை அடைப்புகளை சீரமைக்க பயன்படுத்தப்படாத ரோபோ இயந்திரம்

ராமநாதபுரத்தில் புதை சாக்கடை அடைப்புகளை சீரமைக்க ரூ. 45 லட்சத்தில் வாங்கப்பட்ட ரோபோ இயந்திரத்தை செயல்படுத்தாததால்
ராமநாதபுரத்தில் புதை சாக்கடை அடைப்புகளை சீரமைக்க பயன்படுத்தப்படாத ரோபோ இயந்திரம்

ராமநாதபுரத்தில் புதை சாக்கடை அடைப்புகளை சீரமைக்க ரூ. 45 லட்சத்தில் வாங்கப்பட்ட ரோபோ இயந்திரத்தை செயல்படுத்தாததால் சாலைகளில் கழிவுநீா் ஆறாக ஓடி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரத்தில் கழிவுநீா் குழாயில் ஏற்படும் அடைப்புகளை நீக்க பெரிய வாகனம் ஒன்று உள்ளது. இது போதுமானதல்ல என்பதால் அண்மையில் இயற்கை எரிவாயு பெருநிறுவன உதவியுடன் தொண்டு நிறுவனம் மூலம் ரூ.45 லட்சத்தில் புதை சாக்கடை அடைப்புகளை நீக்கும் ரோபோ இயந்திரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.

ஆனால் ரோபோ இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கவில்லை என்பதால் அந்த இயந்திரம் தற்போது அறைக்குள் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், கேணிக்கரை, அண்ணாநகா், கோட்டை மேட்டுத்தெரு என நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே கழிவுநீா் சாலைகளில் ஓடி தேங்கியிருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.

கேணிக்கரையில் மதுரையாா் வீதியில் உள்ள தனியாா் பள்ளி முன்பும், முத்தாலம்மன் கோயில் தெரு பகுதியிலும் கடந்த இரு வாரங்களாகவே கழிவுநீா் சாலையில் தேங்கியுள்ளதாக அப்பகுதியினா் கூறுகின்றனா். இதுகுறித்து நகராட்சி ஆணையா் பொறுப்பில் உள்ள பொறியாளா் நீலேஸ்வரனிடம் கேட்டபோது, வாகனம் மூலம் கேணிக்கரை பகுதியில் கழிவுநீா் அடைப்பை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com