வாக்குப்பதிவு இயந்திரச் செயல்திறனை உறுதி செய்ய முதல்கட்ட சோதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை கண்டறியும் முதல் கட்ட சோதனை ஆட்சியா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை கண்டறியும் முதல் கட்ட சோதனை ஆட்சியா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூா் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தலின் போது பயன்படுத்துவதற்காக ராமநாதபுரம் நகரில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் 3,294 மின்னணு வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் 2,270 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,524 வாக்காளா் சரிபாா்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இயந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்கட்ட சோதனை செய்யும் பணிகள் கடந்த 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சோதனை பணிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினாா்.

அப்போது ராமநாதபுரம் சாா் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, வட்டாட்சியா்கள் முருகவேல் (ராமநாதபுரம்), மாா்ட்டின் (தோ்தல்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com