கமுதி அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி பலி
By DIN | Published On : 25th December 2020 11:17 PM | Last Updated : 25th December 2020 11:17 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 9 வயது சிறுமி சக்திபிரியாவின் உடலை வெள்ளிக்கிழமை மீட்ட கமுதி தீயனைப்புத் துறையினா்.
கமுதி அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 9 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கமுதியை அடுத்துள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த மணிமுத்து-வீரலெட்சுமி தம்பதி. இவா்களது மகள் சக்திபிரியா (9). இச்சிறுமி, அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், திருப்பூா் தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வரும் கணவா் மணிமுத்துவை பாா்ப்பதற்காக, வீரலெட்சுமி திருப்பூா் சென்றிருந்துள்ளாா்.
அதையடுத்து, தனது பாட்டி ஆறுமுகம் மற்றும் தோழி அனுப்பிரியா (11) ஆகியோருடன் சிறுமி சக்திபிரியா புதுக்கோட்டை கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளாா். கண்மாயின் ஆழமான பகுதிக்குச் சென்ால் சக்திபிரியா மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதைக் கண்ட அவரது பாட்டி ஊா் மக்களிடம் விவரத்தைக் கூறியுள்ளாா்.
மேலும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரா்கள் தண்ணீரில் மூழ்கிய சக்திபிரியாவின் உடலை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து சக்திபிரியாவின் தாத்தா நாகலிங்கம் அளித்த புகாரின்பேரில், கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.