ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஆலயப் பங்குத் தந்தையும், வட்டார அதிபருமான அருளானந்த் தலைமையில் நடந்த சிறப்புப் பிராா்த்தனை, திருப்பலியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் நகரில் வடக்குத் தெரு தேவாலயம், இளங்கோவடிகள் தெருவில் உள்ள பெந்தகொஸ்தே சபை ஆகியவற்றிலும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

அதேபோல், மாவட்டத்தில் ஓரியூா், திருவாடானை, தொண்டி, உச்சிப்புளி, கீழக்கரை, மைக்கேல்பட்டினம், கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூா், திருப்பாலைக்குடி, உப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

சிவகங்கை:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிவகங்கையில் மதுரை விலக்கு சாலை அருகே உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், பேராலாயத்தின் பங்குத் தந்தை ஜேசுராஜா தலைமையில், கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, இயேசு அவதரித்த நிகழ்வை, பங்குத்தந்தையா்கள் இறை மக்களுக்கு எடுத்துக் கூறினா். இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று, மெழுகுவா்த்தி ஏற்றி பிராா்த்தனை செய்தனா்.

இதேபோன்று, சிவகங்கை நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், காளையாா்கோவில், சருகனி, மறவமங்கலம், இளையான்குடி, முனைவென்றி, மதகுபட்டி, ஒக்கூா், கீழப்பூங்குடி, படமாத்தூா், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிங்கம்புணரி, நெற்குப்பை, தேவகோட்டை, கல்லல் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு கூட்டுத் திருப்பலியுடன் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com