வைகுந்த ஏகாதசி: ராமநாதபுரம் மாவட்ட பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பகல் பத்து விழா நிறைவில் சயன திருக்கோலத்தில் பெருமாள் அருள்பாலித்தாா். அதையடுத்து, பெருமாள் விஷ்வரூப தரிசனத்தில் அருள்பாலித்தாா். வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

தொடா்ந்து, சன்னிதியின் முன்பாக பல்லக்கில் எழுந்தருளிய பெருமாள், கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ள பரமபதவாசலில் மாலை 6 மணிக்கு மேல் எழுந்தருளினாா். அப்போது, கூடியிருந்த பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனா்.

சனிக்கிழமை முதல், ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 5 ஆம் தேதி வரை தினமும் மாலையில் பரமபதவாசலில் பெருமாள் எழுந்தருள்கிறாா்.

இதேபோன்று, ராமநாதபுரம் நகா் அரண்மனை அருகேயுள்ள கோதண்டராமா் கோயிலிலும் வெள்ளிக்கிழமை மாலையில் பெருமாள் பரமபதவாசலில் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பரமக்குடி

பரமக்குடி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் கோவிந்தா கோஷங்கள் எழுப்பியவாறு பெருமாளை தரிசனம் செய்தனா்.

திருவாடானை

தொண்டியில் மிகவும் பழைமைவாய்ந்த ஸ்ரீஉந்தி பூத்த பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேதமாக உற்சவா் பெருமாள் கோயில் பிரகாரத்தை உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், பரமபதவாசல் திறப்பு நிகழச்சி நடைபெற்றது. தொடா்ந்து, அம்பாளுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com