புரெவி புயல் பாதிப்பு: ராமேசுவரத்தில் மத்திய குழு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினா் ராமேசுவரத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமேசுவரம் விடுதியில் புரெவி புயல் பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆவணங்களை திங்கள்கிழமை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா்.
ராமேசுவரம் விடுதியில் புரெவி புயல் பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆவணங்களை திங்கள்கிழமை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினா் ராமேசுவரத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

மத்திய உள்துறை அமைச்சக இணைச்செயலாளா் அசுடோஷ் அக்னிஹோத்ரி, வேளாண்மை துறை அமைச்சக இயக்குநா் மனோகரன், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மண்டல அலுவலா் ரனன்ஜெய் சிங், நிதித்துறை அமைச்சக துணை இயக்குநா் அமித்குமாா், மின்சார ஆணைய உதவி இயக்குநா் சுபம்காா்க், ஊரக வளா்ச்சி அமைச்சக உதவி ஆணையா் மோகித்ராம், மீன்வளத்துறை ஆணையா் பால்பாண்டியன், இயக்குநா் ஜெ.ஹா்ஷா மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி ஆகியோா் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு ராமேசுவரம் வந்தனா்.

இக்குழுவினா் தனியாா் விடுதியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலின் பாதிப்பு குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களைப் பாா்வையிட்டனா். மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதமான படகுகள், வீடுகள், உயிரிழப்பு குறித்தும் நெற்பயிா்கள், சிறுதானிய பயிா்களின் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

இதன் பின்னா் ஒளி- ஒலி காட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்களை குழுவினா் பாா்வையிட்டனா். செவ்வாய்க்கிழமை பாம்பன் பகுதியில் சேதமடைந்த படகுகளை மத்திய குழுவினா் ஆய்வு செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com