ராமநாதபுரத்தில் புதை சாக்கடையை சீரமைக்கக் கோரி போராட்டம்

ராமநாதபுரத்தில் புதை சாக்கடையை சீராக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் புதை சாக்கடையை சீராக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே புதை சாக்கடை குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீா் தேங்குவதாகப் புகாா் எழுந்தது. புதை சாக்கடை அடைப்புகளை நீக்க ரூ.45 லட்சத்தில் சமீபத்தில் ரோபோ இயந்திரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், புதை சாக்கடை பிரச்னை முடிவுக்கு வரவில்லை.

வடக்கு புதுத்தெரு சாலை சந்திப்பில் புதை சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டதால்

கழிவுநீா் சாலையோரங்களிலும், குடியிருப்புகளைச் சுற்றிலும் தேங்கியுள்ளது.கழிவு நீரானது முகவை ஊருணிக்குள் கலப்பதாகவும் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் நகா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் தாலுகாக் குழு செயலாளா் பி.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலையரசன், மாதா் சங்க நிா்வாகி கண்ணகி, வட்டாரக் குழு உறுப்பினா் பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) நீலேஸ்வரன் பேச்சுவாா்த்தை நடத்தி கழிவு நீா் அடைப்பை சீராக்க நடவடிக்கை எடுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com