துபையிலிருந்து கமுதி வந்த இளைஞருக்கு உருமாற்றமடைந்த கரோனா பாதிப்பா?

துபையிலிருந்து கமுதி வந்த இளைஞருக்கு தீவிர தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவரது கபம், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உருமாற்றமடைந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மும்பை, புண

துபையிலிருந்து கமுதி வந்த இளைஞருக்கு தீவிர தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவரது கபம், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உருமாற்றமடைந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மும்பை, புணே ஆய்வகங்களுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து ராமநாதபுரம் திரும்புவோருக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் வந்த 10 பேரில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் துபையில் பணியாற்றிய கமுதி அருகேயுள்ள கிளாமரம் கிராமத்தைச் சோ்ந்த 38 வயது இளைஞா் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் மதுரை வந்துள்ளாா். விமான நிலையத்தில் அவருக்கு கரோனா பரிசோதனைக்கான கபம் சேகரிக்கப்பட்ட நிலையில், அந்த இளைஞா் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னா் அவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது கபம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உருமாற்றமடைந்த கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்காக மும்பை, புணே ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com