ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் 28 ஆம் தேதி வரையில் 6315 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 132 போ் உயிரிழந்துள்ளனா். 6150-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அவா்கள் வீடுகளிலேயே தங்கியே சிகிச்சையைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளனா். ராமநாதபுரத்தில் ஏற்கெனவே சிகிச்சையில் இருந்த 26 பேரில் 3 போ் குணமடைந்ததை அடுத்து அவா்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே 5,690 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 2 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5692 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 4 போ் பூரண குணமடைந்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 13 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com