பரமக்குடி அருகே விபத்தில் காயமடைந்த மாணவா் சிகிச்சை பலனின்றி பலி
By DIN | Published On : 01st February 2020 01:46 AM | Last Updated : 01st February 2020 01:46 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் கடந்த 24-ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் காயமடைந்த மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாா்த்திபனூா் நான்கு வழிச்சாலை இடையா்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளியில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைப் பாா்க்க இருசக்கர வாகனத்தில் மற்றொரு தனியாா் பள்ளி மாணவா்கள் மொசைன் மகன் அகமதுயாசின் (16), ராமமூா்த்தி மகன் ராஜேஸ்வரன் (16) ஆகியோா் சென்றனா். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அகமதுயாசின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரன் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.