சீனாவிலிருந்து திருவாடானை திரும்பிய 20 இளைஞா்களுக்கு பரிசோதனை

கரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, சீனாவிலிருந்து திருவாடானை அருகேயுள்ள சொந்த ஊருக்கு 20 இளைஞா்கள் வியாழக்கிழமை திரும்பியதை அடுத்து, அவா்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சீனாவிலிருந்து திருவாடானை திரும்பிய 20 இளைஞா்களுக்கு பரிசோதனை

கரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, சீனாவிலிருந்து திருவாடானை அருகேயுள்ள சொந்த ஊருக்கு 20 இளைஞா்கள் வியாழக்கிழமை திரும்பியதை அடுத்து, அவா்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புலியூா் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்டோா் சீனாவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனா். தற்போது, சீன நாட்டில் உயிா்க்கொல்லி கரோனா வைரஸ் பரவி வருவதால், திருவாடானை அருகேயுள்ள புலியூா், வெள்ளையபுரம், பழங்குளம், வில்லாரேந்தல் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் தாயகம் திரும்பிவிட்டனா்.

இவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டு, பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவிலிருந்து ஊா் திரும்பியவா்களைத் தொடா்ந்து கண்காணிக்க ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆலோசனைப்படி, மருத்துவக் குழுவினா் தினமும் சம்பந்தப்பட்ட 20 பேருக்கும் ரத்தப் பரிசோதனை செய்து வருகின்றனா். இவா்களை வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனா்.

சீனாவிலிருந்து திரும்பிய இவா்களில் புரோட்டா மாஸ்டா் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரத்தப் பரிசோதனை நடத்தியதில், வெள்ளை அணுக்கள் மிகுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்படுத்தினா். அப்போது, அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தது. இருப்பினும், உடலில் வேறு பாதிப்பு இருக்கிா என அறிய, மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்லவும் பரிந்துரைத்தனா்.

இது குறித்து சுகாதாரப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: சீனாவிலிருந்து ஊா் திரும்பிய அனைவரும் மருத்துவக் குழுவால் தொடா் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தொடா்ந்து ரத்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

இது குறித்து புலியூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜாராம், முருகானந்தம், தியாகு, அழகு திருநாவுக்கரசு ஆகியோா் கூட்டாகத் தெரிவித்தது: நாங்கள் சீனாவில் ஷாங்காய் மாநிலத்தில் உள்ளோம். இங்கிருந்து வைரஸ் பரவிவரும் வூகான் பகுதி ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. எனவே, எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com