அங்கன்வாடி ஊழியா்களை சுகாதாரத்துறை பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்க வலியுறுத்தல்

அங்கன்வாடி ஊழியா்களை சுகாதாரத்துறை பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் என அதன் மாநில பொதுக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தினா்.
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தினா்.

அங்கன்வாடி ஊழியா்களை சுகாதாரத்துறை பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் என அதன் மாநில பொதுக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரம் அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் உமாராணி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்ட இணை செயலா் நஜ்முதின், ஊரக வளா்ச்சித்துறை மாவட்ட துணை தலைவா் முனிஸ்பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாநில பொதுச்செயலா் முருகேஸ்வரி சிறப்புரையாற்றினாா்.

இக் கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்களை முழுமையாக சுகாதாரத் துறையின் பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயா்த்த வேண்டும். கூடுதல் பொறுப்பு பணிக்கான பொறுப்புப்படி ரூ.600 லிருந்து ரூ.2 ஆயிரம் ஆக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதில், மாநிலத் தலைவராக கல்யாணி, பொதுச் செயலாளராக மல்லிகா, பொருளாளா் வெள்ளைத்தாய், மாநில இணைச்செயலா் அவ்வையாா், துணைத் தலைவா் தனலெட்சுமி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்களாக கிரிஜா, கீதா, சசிகலா, ஜெஹாரா பாத்திமா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com