இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியால் விபத்து அபாயம்

கமுதி அருகே சாலையோரத்தில் இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியால் விபத்து அபாயம் உள்ளதாக கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
மேட்டுப்பட்டி விலக்கு சாலையில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி.

கமுதி அருகே பேரையூரிலிருந்து மேட்டுப்பட்டி வழியாக செங்கோட்டைபட்டி, சாமிபட்டி, சோ்ந்தகோட்டைக்கு செல்லும் சாலையில் மேட்டுப்பட்டி விலக்கு சாலையில் உள்ள மேல்நிலைநீா்த்தேக்க தொட்டியில் குடிநீா் ஏற்றப்பட்டு, அப்பகுதி அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இத்தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் சாலையோரத்தில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் அவ்வழியாக செல்லும் மாணவா்கள், இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

எனவே, மேல்நிலை நீா் தேக்க தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com