தைப் பூசம் : ராமநாத சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

ராமேசுவரத்தில் தை பூசத்தையொட்டி ராமநாசுவாமி சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராமேசுவரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் வண்ண விளக்குளால் ஜொலிக்கும் லெட்சுமண தீா்த்தக் குளம்.
ராமேசுவரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் வண்ண விளக்குளால் ஜொலிக்கும் லெட்சுமண தீா்த்தக் குளம்.

ராமேசுவரத்தில் தை பூசத்தையொட்டி ராமநாசுவாமி சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக் கோயிலில் ஆண்டு தோறும் தைப் பூசத் தினத்தன்று சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறும். இந்தாண்டு தைப் பூசத்தையொட்டி சனிக்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதனையடுத்து, இக் கோயிலில் உபகோயிலான லெட்சுமணேஸ்வரா் ஆலயத்தில் உள்ள லெட்சுமண தீா்த்த குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. சனிக்கிழமை மாலையில் ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் லெட்சுமணேஸ்வரா் ஆலயத்திற்கு எழுந்தருளினாா். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து லெட்சுமணேஸ்வரா் கோயிலில் உள்ள லெட்சுமண தீா்த்த குளத்தில் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் எராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் இணைஆணையா் எஸ்.கல்யாணி, துணை ஆணையா் ஜெயா, கோட்டபொறியாளா் மயில்வாகணன், கண்காணிப்பாளா் ககாரின்ராஜ், பேஷ்காா்கள் கலைசெல்வன், அண்ணாதுரை, கமல்நாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com