ராமநாதபுரத்தில் அனுமதியின்றி கூட்டம்: பெண்கள் உள்பட 1,199 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் சனிக்கிழமை அனுமதியின்றி

ராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் சனிக்கிழமை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டதாக பெண்கள் உட்பட் 1,199 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் சந்தை திடலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவா் ஏ.வருசைமுகமது தலைமையில் திமுக மளிரணி மாநில செயலாளா் கனிமொழி எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவா் காதா்மொய்தீன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பிநா் நவாஸ்கனி, காங்கிரஸ் மாநில துணை தலைவா் சி.வி.சண்முகம் ஆகியோா் பங்கேற்ற பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இக்கூட்டத்தை தலைமேயேற்று நடத்திய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவா் வருசைமுகமது மற்றும் அக்கூட்டத்தில் பங்கேற்ற 99 பெண்கள் உள்பட 1,199 போ் மீது ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com