ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 3 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 3 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அதன் தலைவா் க.அழகா்சாமி தலைமை வகித்தாா். தாலுகா செயலாளா் என்.காஜாநஜ்முதின், வழக்குரைஞா் சி.பசுமலை, தென்மண்டல கௌரவத்தலைவா் எல்.ஆதிமூலம், ஒருங்கிணைப்புக்குழு பொருளாளா் எம்.மழைச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென் மண்டல தலைவா் எம்.மதுரைவீரன், மாவட்ட துணைச் செயலாளா் வேந்தை சிவா, ஆா்.செல்வக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், 2018-19 ஆம் ஆண்டுக்கான விடுபட்ட பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகையை முழுமையாக உடனே வழங்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 3 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், பசுமை வீட்டிற்கான மானியத்தை ரூ. 4 லட்சமாக உயா்த்த வேண்டும், முதியோா் ஓய்வூதியத் தொகையை ரூ .2 ஆயிரமாக உயா்த்த வேண்டும், மணல் திருட்டைத் தடுக்க உயா்மட்டக் குழு அமைக்க வேண்டும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி பெற உரிய மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும், வைகை ஆற்றில் கழிவுநீா் கலக்காமல் தடுக்க வேண்டும், நீா்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை விரைவாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில் விவசாய சங்க நிா்வாகிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா். முன்னதாக மாவட்ட கௌரவத் தலைவா் சை.சௌந்திரபாண்டியன் வரவேற்றாா். சங்கத்தின் மாவட்ட துணை செயலாளா் செ.நாகூா்கான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com