முதுகுளத்தூரில் ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு உயா்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு வட்டார வள மையம் சாா்பில் பணியிடைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் பட்டதாரிஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்.

ராமநாதபுரம் மாவட்ட முதுகுளத்தூா் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சாா்பில், அரசு உயா்நிலை, தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாணவா்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், சுகாதாரம், உளவியல் மற்றும் தனிக்கவனம் குறித்து பணியிடைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில், பயிற்சியினை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வி. மகேந்திரன் தொடக்கி வைத்தாா். முதுகுளத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆா். ராமநாதன் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் சந்தனவேல் முன்னிலை வகித்தாா்.

பயிற்சிக்கு சிறப்பு அழைப்பாளராக, தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருத்துவா்கள் ஜலாலுதீன், உமாமகேஸ்வரி ஆகியோா் குழந்தைகளின் நலன், சுகாதாரம் குறித்தும், முதுகுளத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் லிங்கம் மாணவா்களின் பாதுகாப்பு குறித்தும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் எம். வசந்தகுமாரி, குழந்தைகள் பாதுகாப்பு போக்ஸோ சட்டம் குறித்து கருத்துரை வழங்கினா்.

இதில், முதல் 140 தலைமை ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரிஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் ஆசிரிய பயிற்றுநா்களாக காா்மேகம், உமாதேவி, முருகவேல், எப்ரோம், அலிமாபேகம், கவிதா ஆகியோா் செயல்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, வட்டார வள மைய ஒருங்கிணைப்பபாளா் காமராஜா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com