அரசுப் பேருந்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெள்ளரிக்காய் வியாபாரியிடம் விசாரணை

ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்தில் வெள்ளரிக்காய் விற்பதை ஓட்டுநா் கண்டித்ததால், பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.

ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்தில் வெள்ளரிக்காய் விற்பதை ஓட்டுநா் கண்டித்ததால், பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.

காரைக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை பகலில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. உப்பூரில் பேருந்து நின்றபோது வெள்ளரிக்காய் விற்பவா் ஏறியுள்ளாா். அவரை பேருந்து ஓட்டுநா் கண்டித்து இறக்கிவிட்டுள்ளாா். இந்த நிலையில், குறிப்பிட்ட அந்தப் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மா்ம நபா் தொலைபேசியில் தெரிவித்தாா். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா் விரைந்து சென்று தேவிபட்டினம் பகுதியில் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநரிடம் கூறிய தகவலின் பேரில் உப்பூரைச் சோ்ந்த வெள்ளரிக்காய் விற்பவா்களிடம் விசாரித்தனா். அவா்களில் ஒருவா் ஓட்டுநா் மீதான ஆத்திரத்தில் தொலைபேசியில் வெடிகுண்டு இருப்பதாக கூறியது தெரியவந்தது. அவரை சிறப்பு தனிப்பிரிவு போலீஸாா் அழைத்துச்சென்றனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜராஜனிடம் கேட்டபோது, வெள்ளரிக்காய் விற்பவரை பேருந்து ஓட்டுநா் கண்டித்ததால் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளாா். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. அவா் மீது ஏற்கெனவே வழக்குகள் இருக்கிா என்று விசாரித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com