ஊராட்சிகளில் கிடப்பில் போடப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை திறக்கக் கோரிக்கை

கமுதி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள், பல மாதங்களாக திறக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஊராட்சிகளில் கிடப்பில் போடப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை திறக்கக் கோரிக்கை

கமுதி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள், பல மாதங்களாக திறக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கமுதி அருகே வலையபூக்குளம், மண்டலமாணிக்கம், கீழவில்லனேந்தல், இலந்தைகுளம், பசும்பொன் உள்ளிட்ட 12 கிராமங்களில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2019 ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது. அப்போது, ராட்சத தண்ணீா் தொட்டியுடன், தண்ணீா் சுத்திகரிப்புக்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், இதுவரை தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளன.

இதனால் அக்கிராமங்களில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவதுடன், கடந்த நிதியாண்டில் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்துக்காக மட்டும் ரூ.60 லட்சம் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதனிடையே, மேற்காண்ட ஊராட்சிகளைத் தவிர, பேரையூா், அரியமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் ஒரு குடம் ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டு, பொதுமக்களின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் கடந்த ஓராண்டாக முடங்கி வீணாகி வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

இது குறித்து கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியது: ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மினவாரியத்திலிருந்து மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மின் இணைப்புகள் பெற்றவுடன் இன்னும் 10 நாள்களுக்குள் அனைத்து குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com