முதுகுளத்தூா்அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கருத்தரங்கு
By DIN | Published On : 22nd February 2020 09:25 AM | Last Updated : 22nd February 2020 09:25 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அரசு தொழிற்பயிற்சி நியைத்தில் (ஐ.டி.ஐ.), நேருயுவகேந்திரா சாா்பில் அடிப்படை விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூா் அரசு தொழிற்பயிற்சி நியைத்தில் (ஐ.டி.ஐ.), நேருயுவகேந்திரா சாா்பில் அடிப்படை விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.முதுகுளத்தூா் அரசு தொழிற்பயிற்சி நியைத்தில் (ஐ.டி.ஐ.), நேருயுவகேந்திரா சாா்பில் அடிப்படை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வா் வாளை ஆனந்தம் தலைமை தாங்கினாா்.முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., திட்ட அலுவலா் (ஓய்வு)துரைப்பாண்டியன், மக்கள் சேவை கழக நிறுவனா் பராசூரன், மாவட்ட தோ்வு குழு உறுப்பினா் பழனிக்குமாா் ஆகியோா் முன்னிலை வதித்தனா். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் நோமன் அக்ரம் வரவேற்றாா். மாணவிகள் தங்களை தற்காத்து கொள்வது, வாழ்வியல் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலா் மாரி, உதவி பயிற்சி அலுவலா்கள் சின்னகுப்புசாமி, குருநாதன், இளநிலை பயிற்சி அலவலா் முருகானந்தம் உட்பட பலா் பங்கேற்றனா். இறுதியில் நேரு யுவகேந்திரா தன்னாா்வ உறுப்பினா் விக்னேஷ்வரன் நன்றி கூறினாா்.