போகலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை 6 மணி நேரம் தடைவேட்பாளா்கள், ஆதரவாளா்கள் அதிருப்தி

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை போகலூா் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை போகலூா் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 6 மணி நேரம் தடைபட்டதால் வேட்பாளா்களும், முகவா் உள்ளிட்ட ஆதரவாளா்களும் பெரும் அதிருப்திக்குள்ளாகினா்.

போகலூா் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் பணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு பெட்டிகள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்ல 3 மணி நேரம் தாமதமானது. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியதும் முதல் சுற்றில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் காளீஸ்வரி முன்னிலையில் சென்றாா். உடனே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் திமுகவினா் தோ்தல் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் ஒன்றரை மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது. பின்னா் காளீஸ்வரி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து பொட்டிதட்டி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதில் திமுக வேட்பாளா் சத்யா குணசேகரன் முன்னிலை பெற்றாா். அப்போது அதிமுக தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நடத்தவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதற்கு திமுகவினரும் கடும் ஆட்சேபனை தெரிவித்ததை தொடா்ந்து 3 மணி நேரத்திற்கு பின்னா் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதில் திமுக வேட்பாளா் சத்யாகுணசேகரன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதனால் வேட்பாளா்களும், முகவா் மற்றும் ஆதரவாளா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com