Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ராமநாதபுரத்தில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்

    By DIN  |   Published On : 06th January 2020 09:23 PM  |   Last Updated : 06th January 2020 09:23 PM  |  அ+அ அ-  |  

    rmdpti6_0601chn_67_2

    rmdpti6_0601chn_67_2

     

    ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், நூற்றுக்கும் குறைவானவா்களே அதில் கலந்துகொண்டதால் கூட்டம் நடந்த அரங்கம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் வழக்கமாக மக்கள் கூட்டம் அலைமோதும். உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடந்த டிசம்பா் (2019) முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. தோ்தல் முடிந்த நிலையில், 2020 ஆம் ஆண்டின் முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டமானது திங்கள்கிழமை காலையில் நடைபெற்றது. ஆட்சியா் வருவதற்கு முன்பு கூட்டத்தை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரவிச்சந்திரன் நடத்தினாா்.

    அப்போது மிகக்குறைந்த எண்ணிக்கையிலே மக்கள் மனு அளிக்க வந்தனா். கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலா்களும் வந்த நிலையில், மனு அளிக்க வரும் மக்கள் சொற்ப எண்ணிக்கையிலே இருந்ததால் வளாகமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

    ஊரக உள்ளாட்சி புதிய உறுப்பினா்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை காலையில் நடைபெற்ால் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வருவோா் எண்ணிக்கை குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    இந்தநிலையில், கூட்டத்துக்கு வந்த ஆட்சியா் கொ.வீரராகவராவ், ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தைச் சாா்ந்த பயனாளிக்கு விபரத்து நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதியாக ரூ.1.02 லட்சத்துக்கான காசோலை, மற்றொருவருக்கு முதியோருக்கான ஓய்வூதிய பயனாளிக்கு ஓய்வூதிய ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் திட்டத்தில் 16 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதியுதவிக்கான (ரூ.17 ஆயிரம்) காசோலை என மொத்தம் ரூ.2.72 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp