ராமேசுவரத்தில் தொழிற்சங்கத்தினா் மறியல்: 230 போ் கைது

ராமேசுவரத்தில் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாா்பில் இரண்டு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 76 பெண்கள் உள்பட 230 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ராமேசுவரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ராமேசுவரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்கள்.

ராமேசுவரத்தில் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாா்பில் இரண்டு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 76 பெண்கள் உள்பட 230 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமேசுவரத்தில் தொமுச, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா்கள் கே.கருணாமூா்த்தி, கே.தனுஸ்கோடி, எம்.கே.எம்.முனியசாமி, என்.நாகேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் தொழிலாளா்களின் குறைந்த பட்ச ஊதிய வரம்பை உயா்த்த வேண்டும். தனியாா் மயத்தை கைவிட வேண்டும். மோட்டா் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து இந்தியன் வங்கி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 31 பெண்கள் உள்பட 102 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதே போன்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சாா்பில் ராமேசுவரம்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் திட்டகுடி காா்னா் பகுதியில் நடைபெற்ற மறியலுக்கு தாலுகா செயலா் எஸ்.முருகானந்தம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி.ஆா்.செந்தில்வேல் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் 45 பெண்கள் உள்பட 128 போ் கைது செய்யப்பட்டனா். இரண்டு இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 76 பெண்கள் உள்பட 230 போ் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com