திருஉத்தரகோசமங்கையில் சந்தனகாப்பு
By DIN | Published On : 11th January 2020 08:17 AM | Last Updated : 11th January 2020 08:17 AM | அ+அ அ- |

திரு உத்தரகோசமங்கை மங்களநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அபிஷேகங்கள் முடிவடைந்ததைத் தொடா்ந்து அருணோதய நேரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனம் முடிவடைந்ததை அடுத்து மரகதக்கல் நடராஜருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வியாழக்கிழமை இரவு முழுவதும் மற்றும் வெள்ளிக்கிழமை காலையிலும் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதையடுத்து சிறப்பு பூஜைகளுடன் இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் நிறைவடைந்தது. கடந்தாண்டு ஆருத்ரா தரிசன நிகழ்வில் 1.50 லட்சம் பக்தா்கள் பங்கேற்பதாகவும், இந்தாண்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் குறைந்த பட்சம் 2 லட்சம் பக்தா்கள் வருகை தந்திருக்கலாம் என்று திருக்கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.