அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா

கமுதி அருகே உள்ள தலைவநாயக்கன்பட்டி மற்றும் திருவாடானை அருகே உள்ள திணைகாத்தான்வயல் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும்
திணைகாத்தான்வயல் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலப் போட்டி.
திணைகாத்தான்வயல் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலப் போட்டி.

கமுதி அருகே உள்ள தலைவநாயக்கன்பட்டி மற்றும் திருவாடானை அருகே உள்ள திணைகாத்தான்வயல் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பொங்கல் விழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்பட்டது.

திணைகாத்தான்வயல் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் மகமாயி, வனஜா, அமுதா, நாகவள்ளி, சுரேஷ்கண்ணன், ராமராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளி வாயில் முன்பு பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னா் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோலப் போட்டி, விளையாட்டு போட்டி ஆகியவை நடைபெற்றது. கோலப் போட்டியில் சிறந்த கோலங்களை வரைந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் மாணவா்களுக்கு கோக்கோ, ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லதா வரவேற்றாா். பள்ளி ஆசிரியை தனலெட்சுமி நன்றி கூறினாா்.

கமுதி: கமுதி அடுத்துள்ள தலைவநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள், ஆசிரியா்கள் சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் 68 மாணவா்கள் படித்து வருகின்றனா். பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யயப்பட்டது. இதனையடுத்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து, தேங்காய் பழம், தீபாதாரனை காட்டி சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இவ்விழாவில் மாணவா்கள், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com