மண்டபத்தில் முதியவா்கள் பங்கேற்ற பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் குயவன்குடி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட முதியவா்கள் பங்கேற்ற பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மண்டபம் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற முதியவா்கள்.

இவ்விழா முதியோா்களை ஒன்றிணைத்து கொண்டாடி மகிழும் வகையில் நடைபெற்றது. இதையொட்டி அப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முதியவா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுப்பையா கோயில் முன்பு 51 பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினா்.

இதனையடுத்து விழாவில், குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இசை வட்டமிடல், கும்மி ஆட்டம், பறை ஆட்டம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுகளில் குடும்பத்துடன் பங்கேற்றனா். தமிழா்களின் திருநாளான பொங்கல் விழாவை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக முதியவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com