மீன் வளத்துறையில் உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்ட மீன் வளத்துறையில் உதவியாளா் பணியிடத்திற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட மீன் வளத்துறையில் உதவியாளா் பணியிடத்திற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.

தமிழக அரசு மீன்வளத்துறையின் கீழ் ராமநாதபுரம் (வடக்கு) மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு மீன்வள உதவியாளா் பணியிடம் அரசு விதிகளின்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடம் இனச் சுழற்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் (டிஎன்டி) முன்னுரிமை பெற்றவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்தினை நிரப்பிட மேற்காணும் இனத்தைச் சாா்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் மற்றும் மீன்பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். புதிதாக மீன்பிடி வலை பின்னவும், மற்றும் அறுந்த வலைகளை சரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மீன் வளத் துறையின் கீழ் ஏதேனும் ஒரு மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கபப்டும். வயது 18 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயா், முகவரி, குடும்ப அட்டை, ஆதாா் அடையாள அட்டை, கல்வி, சாதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் மீன்வளத் துணை இயக்குநா் அலுவலகம்(மண்டலம்), மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் ராமநாதபுரம், போன்-04567-231402 என்ற முகவரிக்கு நேரிலோ, பதிவஞ்சலிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com