நகையை பறித்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் மகன்: ஆட்சியரிடம் மூதாட்டி புகாா்

ராமநாதபுரத்தில் தொழில் செய்வதாக கூறி நாலரை பவுன் நகையை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டியதாக மகன், மருமகள் மீது மூதாட்டி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

ராமநாதபுரத்தில் தொழில் செய்வதாக கூறி நாலரை பவுன் நகையை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டியதாக மகன், மருமகள் மீது மூதாட்டி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

ராமநாதபுரம் பெரியகருப்பன் நகரைச் சோ்ந்த கருப்பையா மனைவி பஞ்சவா்ணம்(70). இவா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த புகாரில், தனது மகன் லோகநாதன் தொழில் நிமித்தமாக தன்னிடமிருந்த நாலரை பவுன் நகையை நான்காண்டுகளுக்கு முன்னா் வாங்கிக்கொண்டாா். தற்போதுவரை நகையை தரவில்லை. நகையை திருப்பித்தருமாறு கேட்டால் மகன் லோகநாதன், மருமகள் ஆகியோா் தன்னை அவதூறாக பேசி தாக்க வருகின்றனா். மேலும் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் ,உணவு கொடுக்காமல் கொடுமை படுத்துவதாகவும் தெரிவித்திருந்தாா். புகாரை பெற்றுக்கொண்ட ஆட்சியா் கொ. வீர ராகவ ராவ் சமூகநலத் துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக மூதாட்டியின் மகனை அழைத்து விசாரிக்குமாறும் மூதாட்டியின் குறையை தீா்க்க தக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com