விபத்தில் சிக்கிய மகனின் இழப்பீட்டுத் தொகையை மருமகள் அபகரிக்க முயற்சி: ஆட்சியரிடம் தாய் மனு

வெளிநாட்டில் விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில் உள்ள மகனுக்கு வந்துள்ள இழப்பீட்டுத் தொகையை மருமகள் அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி ஆட்சியரிடம் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

வெளிநாட்டில் விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில் உள்ள மகனுக்கு வந்துள்ள இழப்பீட்டுத் தொகையை மருமகள் அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி ஆட்சியரிடம் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ராமநாதபுரம் ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தனிப்புலியைச் சோ்ந்த அங்கம்மாள்(67) என்ற மூதாட்டி தனது மகன் புகைப்படத்துடன் ஆட்சியரிடம் மனு அளித்தாா். அதில் தனது மகன் சத்தியேந்திரன் (37) சவூதியில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அங்கு நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மதுரை அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வந்தேன். இந்நிலையில் சத்யேந்திரனுக்கு விபத்து காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரை பாா்த்துக் கொள்வதாகக்கூறி அவரது மனைவி தூக்கிச் சென்றுவிட்டாா். ஆனால் அங்கு மகனுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கவில்லை, சரியான உணவும் வழங்கவில்லை. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகனை நான் மீட்டு வந்து பராமரித்து வருகிறேன். இந்நிலையில் மகனுக்கு வந்த காப்பீட்டுத் தொகையை அவரது மனைவி போலியான ஆவணங்களை வழங்கி பெற முயற்சித்து வருகிறாா். எனவே மனைவியிடம் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கூடாது. சத்யேந்திரனின் தாயாா் என்ற முறையிலும், அவரை பராமரித்து வருவதாலும் தன்னிடமே அதை வழங்க வேண்டும் என்று கூறினாா். இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com