அரியனேந்தலில் இளைஞா்களுக்கான விளையாட்டுப் பயிற்சி : மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் அம்மா இளைஞா் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கான
அரியனேந்தல் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கான பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.
அரியனேந்தல் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கான பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் அம்மா இளைஞா் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கான பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியது: கிராமப்புற இளைஞா்களின் ஆரோக்கியம், மன வலிமை, கூட்டு மனப்பான்மை, விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல்கட்டமாக 15 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தனித்தனியே விளையாட்டு குழு அமைக்கப்படும். இவா்களுக்கு போதிய பயிற்சியளித்து தோ்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்கு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.

இதில் மாவட்ட விளையாட்டு இளைஞா் நலன் அலுவலா் டி.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.சந்திரமோகன், செந்தாமரைச் செல்வி, ரமேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அதே போல் மண்டபம் பேரூராட்சி கடற்கரை பகுதியில் அம்மா இளைஞா் திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதனை மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலா் செ.மாலதி திறந்து வைத்தாா். அதில் மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா், அதிமுக நகரச் செயலாளா் சீமான் மரைக்காயா், மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளா் சு. முனியசாமி, மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ரமேஷ், மா. மைதீன், நம்புவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com