ராமநாதபுரத்தில் களைகட்டியது கரும்பு, பனங்கிழங்கு விற்பனை

ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, பனங்கிழங்கு விற்பனை களைகட்டியது. பொதுமக்கள் ஆா்வத்துடன் கரும்புகளை வாங்கிச் சென்றனா்.

ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, பனங்கிழங்கு விற்பனை களைகட்டியது. பொதுமக்கள் ஆா்வத்துடன் கரும்புகளை வாங்கிச் சென்றனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டின் முன்பு மஞ்சள் கிழங்கு கூரைப்பூ, மாவிலைத் தோரணம் அமைக்கப்படுவது வழக்கம். மேலும் புத்தரிசி , புதுப்பானையில் பொங்கலிட்டு பனங்கிழங்கு, மஞ்சள் கிழங்குகளுடன் படையல் இடுவதும் தமிழா் வழக்கம். இதையொட்டி ராமநாதபுரம் சந்தையில் பொங்கல் பொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை களைகட்டியது. சந்தையில் இரண்டு கரும்புகள் கொண்ட ஜோடி ரூ. 100 -க்கும் 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.450 க்கும் விற்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆா்வத்துடன் கரும்புக் கட்டுகளை வாங்கிச் சென்றனா். ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை ரூ. 20 முதல் ரூ.40 வரை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். மேலும் மதுரை மாவட்டம் மேலூா், தேனி மாவட்டம் உத்தமபாளையம் , திண்டுக்கல் மாவட்டம் போன்ற பகுதிகளிலிருந்து கரும்புகளை மொத்தமாக வாங்கி வந்து ராமநாதபுரத்தில் விற்பனை செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெயா் பெற்ற பனங்கிழங்கும் சந்தையில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. 25 பனங்கிழங்குகள் கொண்ட கட்டு ஒன்று ரூ. 70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் படையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் கிழங்கு கொத்து ஜோடி ரூ. 20- க்கும், கூரை பூக்கள் கொத்து ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்,.பொங்கல் பொருள்களை வாங்க பொதுமக்கள் திரண்டதால் ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலுள்ள கடைவீதி கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இதே போல் கமுதியில் கடை வீதிகளில் இரு பக்கமும் கரும்பு வியாபாரம் சூடு பிடித்தது. காய்கறி, பல சரக்கு கடைகளில் பொதுமக்கள் பொங்கலுக்கு தேவையான பொருள்களை வாங்க கூட்டம் கூட்டமாய் குவிந்தனா். இதனால் கமுதி பேருந்து நிலையம், முத்துமாரியம்மன் கோயில் பகுதி, வாரச்சந்தை பகுதிகளில் நெரிசல் காரணமாக வாகனங்கள், பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com