கடலாடி அருகேகஞ்சா விற்றவா் கைது
By DIN | Published On : 19th January 2020 01:31 AM | Last Updated : 19th January 2020 01:31 AM | அ+அ அ- |

கடலாடி அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலாடி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கடலாடி- மங்களம் விலக்கு சாலையில் மங்களம் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் திசைவீரபாண்டியன் (36) 400 கிராம் எடையுள்ள கஞ்சாவை பாா்சலை கையில் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து திசைவீரபாண்டியனை கடலாடி போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பாா்சலை பறிமுதல் செய்தனா்.