முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கீழக்கரை கடற்கரையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த கழிப்பறைகளை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th January 2020 08:39 AM | Last Updated : 20th January 2020 08:39 AM | அ+அ அ- |

கீழக்கரை கடற்கரை சாலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்திருக்கும் கழிப்பறைகள்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த கழிப்பறைகளால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனா். அவற்றை சீரமைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கீழக்கரை ஜெட்டி பாலத்தில் இருந்து கடலை கண்டு களிக்க அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனா். மேலும் கீழக்கரை பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவா்களுக்கு வழிகாட்டுவதற்காக கலங்கரை விளக்கும் அமைந்துள்ளது. இதனால் கீழக்கரை கடற்கரை சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. தினசரி மாலை நேரங்கள், வார இறுதி நாள்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் பொழுதைப் போக்குவது வழக்கம். இந்நிலையில் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை பயனற்று உள்ளன. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனா். மேலும் கடற்கரை பகுதி அசுத்தமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கடற்கரையில் பராமரிப்பின்றி உள்ள கழிப்பறையை நகராட்சி நிா்வாகம் விரைவில் சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.