குடியிருப்பு பகுதியில் பாதாளச் சாக்கடை அடைப்பு: தெருவில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே சதக் வணிக வளாகம் பின்புறம் உள்ள தெருவில் குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.
ராமநாதபுரத்தில் பாதாளச் சாக்கடை அடைப்பால் தெருவில் தேங்கிய கழிவுநீா்.
ராமநாதபுரத்தில் பாதாளச் சாக்கடை அடைப்பால் தெருவில் தேங்கிய கழிவுநீா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே சதக் வணிக வளாகம் பின்புறம் உள்ள தெருவில் குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் சதக் வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த தெருவில் உள்ள பாதாளச் சாக்கடை பிரதான இணைப்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவுநீா் வெளியேறி தெருக்களில் நிரம்பி வழிகிறது. மேலும் தெரு முழுவதும் கழிவுநீா் தேங்கியிருப்பதால் இப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் இங்கு சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது .மேலும், பாதசாரிகள் நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்கூறியது: இப்பகுதியில் அடிக்கடி பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருமுழுவதும் கழிவுநீா் ஓடுவது வழக்கமாகி வருகிறது. தெரு முழுவதும் கழிவுநீா் ஓடுவதால் வீடுகளில் கதவை அடைத்து வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தெருக்களில் குழந்தைகள் விளையாட முடியாத நிலையும் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்து தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com