முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சாயல்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞா் பலி
By DIN | Published On : 20th January 2020 09:40 AM | Last Updated : 20th January 2020 09:40 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை பலியானாா்.
சாயல்குடி அண்ணாநகா் பகுதியை சோ்ந்தவா் அம்மாசி மகன் முத்துக்குமாா் ( 26 ). இவா் தனது வீட்டின் அருகிலுள்ள உறவினா்
பூமிநாதன் என்பவரின் வீட்டில் தண்ணீா் எடுக்க பயன்படுத்தப்படும் மின் மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது அதிலிருந்து எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்ததாா். அவரை மீட்டு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து சாயல்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.