முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் லாரி மோதி மீனவா் பலி
By DIN | Published On : 20th January 2020 09:41 AM | Last Updated : 20th January 2020 09:41 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பாலம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மீனவா் ஞாயிற்றுகிழமை உயிரிழந்தாா்.
ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சோ்ந்த நவீன்(35) மற்றும் ரூபீன்(34) ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் தங்கச்சிடத்தில் இருந்து மண்டபம் நோக்கிச் சென்றனா். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு மீன் ஏற்றிச் செல்ல வந்த லாரி பாம்பன் சாலைப்பாலம் அருகே இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே பலியானாா். பலத்த காயமடைந்த ரூபீன் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தி(40) என்பவரை கைது செய்தனா்.