ராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகள்:மாணவ மாணவியா் உலக சாதனை முயற்சி

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் 2,500 போ் இணைந்து, 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் கொ.வீரராகவ ராவ்.
ராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் கொ.வீரராகவ ராவ்.

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் 2,500 போ் இணைந்து, 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாா்ட்டின் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில், மாவட்டத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகள் உருவாக்கும் நிகழ்ச்சி, ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்து விதைப்பந்து உருவாக்குதலை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

தற்போது உருவாக்கப்படும் விதைப் பந்தில், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த சீதாப்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், சரக்கொன்றை, மயில்கொன்றை மற்றும் பூவரசம் ஆகிய 6 விதமான விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையோடு இணைந்த மனித வாழ்வுக்கு நீா், நிலம், சுற்றுச்சூழல் வளத்தினை மேம்படுத்தி, பசுமையான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும்.

இந்நிகழ்ச்சியை, எலைட் வேல்ட் ரெக்காா்ட்ஸ், ஏசியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி, இந்தியா ரெக்காா்ட்ஸ் அகாதெமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் நேரில் ஆய்வு செய்து சான்றளிக்க உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், ராமநாதபுரம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிஞா் அண்ணா நடுநிலைப் பள்ளி, வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளி, நேஷனல் அகாதெமி கல்விக் குழுமத்தைச் சாா்ந்த பள்ளிகள், முத்துப்பேட்டை கௌசானல் கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சாா்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் ஆா்வமுடன் பங்கேற்று விதைப் பந்துகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், கூடுதல் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாா்ட்டின் சாரிடபிள் டிரஸ்ட் மேலாண்மை இயக்குநா் லீமாரோஸ் மாா்ட்டின், ராமநாதபுரம் சாா்-ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நாகராஜன், நேஷனல் அகாதெமி பள்ளியின் தாளாளா் சையது அப்துல்லா, சையது அம்மாள் பொறியியல் கல்லூரிச் செயலா் சின்னத்துரை அப்துல்லா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com