ராமேசுவரத்தில் ஆதரவின்றி தவித்த தாய், 3 குழந்தைகள் மீட்பு

ராமேசுவரத்தில் குழந்தைகள் பசியைப்போக்க கடைகளில் கையேந்தி நின்ற தாய் மற்றும் 3 குழந்தைகளை காவல்துறையினா் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
ராமேசுவரத்தில் தவித்த 3 குழந்தைகள் மற்றும் தாயை குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைத்த காவல்துறையினா்.

தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெடல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு. இவரது மனைவி முத்துலட்சுமி. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. மதுவுக்கு அடிமையான சாமிக்கண்ணு வேலைக்குச் செல்லாமல் மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளா். அவரது கொடுமை தாங்க முடியாமல் முத்துலட்சுமி 3 குழந்தைகளுடன் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வந்துள்ளா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் ராமேசுவரம் கோயில் பகுதியில் 3 குழந்தைகளுக்கும் உணவு கேட்டு கடைகளில் கையேந்தி நின்றாா். இதைக் கண்ட காவல்துறையினா் முத்துலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் ராமேசுவரம் வந்ததாகவும் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்கப் பணம் இல்லாததால் கடைகளில் உணவு கேட்டதாகவும் கூறியுள்ளனா். மேலும் 3 குழந்தைகள் தன்னுடையது என்பதற்கான

அரசு சான்றிதழ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். இதனையடுத்து காவல்துறையினா் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரியை வரவழைத்து 3 குழந்தைகள் மற்றும் தாய் முத்துலட்சுமியை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com