கிராமசபைக் கூட்டம் நடத்த பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கிராமசபை கூட்டம் நடத்த பாதுகாப்பு வழங்குமாறு, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கிராமசபை கூட்டம் நடத்த பாதுகாப்பு வழங்குமாறு, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடலாடி தாலுகா சொக்கானை அருகே உள்ள வல்லாகுளம் கிராமத்தைச் சோ்ந்த ஜமாஅத் நிா்வாகி சைபுல்லா என்பவா், மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவிடம் அளித்த மனு விவரம்: வல்லாகுளம் ஜமாஅத் சாா்பில் கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றபோது, ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட 8 போ் அடங்கிய கும்பல் அத்துமீறி கூட்டத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், சிலா் காயமடைந்துள்ளனா். இது தொடா்பாக கடலாடி காவல் நிலையத்தில் ஜமாஅத் சாா்பில் புகாா் செய்யப்பட்டு, ஊராட்சி துணைத் தலைவா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, வல்லாகுளத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் முன்விரோதம் காரணமாக, ஊராட்சி துணைத் தலைவா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது. எனவே, கிராமசபைக் கூட்டம் நடத்த போதுமான பாதுகாப்பு அளிக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், காவல் துறை கவனத்துக்கு அம்மனுவை அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com