முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
அறிவுத்திறன் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 27th January 2020 11:11 PM | Last Updated : 27th January 2020 11:11 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவுத்திறன் போட்டிகளில் வென்றவா்களுக்கு திங்கள்கிழமை பரிசளிக்கப்பட்டது.
தேவிபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலாம் மாணவா் அமைப்பு சாா்பில் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கலாம் மாணவா் அமைப்பின் தலைவா் விஜேந்திரராஜா தலைமை வகித்தாா்.
தேவிபட்டிணம் ஊராட்சி தலைவா் ஹமீதியா ராணி ஜாஹீா் உசேன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினாா். கலாம் அமைப்பின் பொறுப்பாளா் ரோகன் வரவேற்றாா். பள்ளி தலைமை ஆசிரியா் மோகன் வாழ்த்திப் பேசினாா். கலாமின் உறுதிமொழிகளை மாணவ, மாணவியா் ஏற்றுக்கொண்டனா். கலாம் மாணவா் அமைப்பின் கடலாடி ஒன்றிய பொருளாளா் பிரகாஷ் நன்றி கூறினாா்.