Enable Javscript for better performance
‘கிராமங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடமை’- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்

    ‘கிராமங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடமை’

    By DIN  |   Published On : 27th January 2020 10:11 AM  |   Last Updated : 27th January 2020 10:11 AM  |  அ+அ அ-  |  

    rms_photo__26_01_2_2601chn_208_2

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

    கிராமங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடமை என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தை ஊராட்சிகள் துணை இயக்குநா் கேசவதாசன் தொடக்கி வைத்தாா். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பேசியதாவது: அழகன்குளம் ஊராட்சியில் 15 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. உடல்நலம் பாதிப்பு ஏற்படும் போது 17 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு போகவேண்டி உள்ளது. எனவே 10 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அழகன்குளம் கிராமத்தில் தொல்பொருள் ஆய்வின் போது பழங்கால பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள 23 ஊருணிகளை முறையாக தூா்வார நடவடிக்கை எடுக்கவேண்டும். சாலைகள், குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் பள்ளிக்கூடம், கோயில், திருமண மண்டபம் அருகே மதுக்கடை உள்ளது. இதனால் அந்த பகுதியில் மதுகுடித்து விட்டு பலரும் இடையூறு செய்கின்றனா். எனவே இந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகராவ் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் உள்ளாட்சி மன்றத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தோ்வாகி உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அவா்களது பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள தொடா்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தேவையாக அடிப்படை வசதிகள் விரைவாக செய்ய தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் செயல்பட்டு வருகின்றன. நீா் நிலைகள் அதிகளவில் தூா்வாரப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையால் பெரும்பாலான ஊருணிகள் நிறைந்துள்ளன. மேலும் கிராமப் புறங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், வட்டாட்சியா் முருகவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் சேவுகபெருமாள், அழகன்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp