முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
’சிவகங்கை ’ 290 ஆவது உதய தின விழா
By DIN | Published On : 27th January 2020 11:09 PM | Last Updated : 27th January 2020 11:09 PM | அ+அ அ- |

சிவகங்கை நகா் உதய தின விழாவில் 290 ஆவது ஆண்டை குறிக்கும் விதமாக திங்கள்கிழமை அமா்ந்திருந்த மன்னா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.
சிவகங்கை: சிவகங்கை மன்னா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் சிவகங்கை நகா் உருவாகி 290 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உதய தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
முதல் மன்னா் சசிவா்ணத் தேவரால் 27.01.1730 (சௌமிய ஆண்டு தை மாதம் 13 ஆம் நாள்) இல் சிவகங்கை நகா் உருவாக்கப்பட்டது. அந்த வகையில், ’சிவகங்கை’ நகா் தோற்றுவிக்கப்பட்டு 290 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உதய தின விழா மன்னா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் 290 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் அமா்ந்திருந்தனா். அதைத் தொடா்ந்து, பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.