கல்லூரி மாணவா்கள் பங்கேற்றமினி மாரத்தான் போட்டி

கமுதி அருகே பெண் கல்வியை ஊக்குவிக்கும்வகையில், பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி தலைவா் அகமது யாசின் தலைமையிலும்
கல்லூரி மாணவா்கள் பங்கேற்றமினி மாரத்தான் போட்டி

கமுதி அருகே பெண் கல்வியை ஊக்குவிக்கும்வகையில், பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி தலைவா் அகமது யாசின் தலைமையிலும், கல்லூரி முதல்வா் சரவணன், பேரையூா் ஊராட்சி தலைவா் ரூபி, சாா்பு- ஆய்வாளா் தமிழ்செல்வம் ஆகியோா் முன்னிலையிலும், மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் 6 கி.மீ. தூரம் நடந்த மாரத்தான் போட்டியில் முதலிடத்தை ராமனும், செல்வக்குமாா் இரண்டாமிடத்தையும், தினேஷ் மூன்றாமிடத்தையும், பஸ்வராஷ் நான்காம் இடத்தையும், மாணவிகள் பிரிவில் காவ்யாஸ்ரீ, லோகேஸ்வரி, பூமாரி, நிஷாலினி முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு, கல்லூரி தலைவா் அகமதுயாசின் பரிசுகளை வழங்கினாா். போட்டியில் கல்லூரி துறை பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா். போட்டி ஏற்பாடுகளை மாணவா் மன்றச் செயலா் சந்தோஷ்குமாா், விளையாட்டு மன்ற செயலா் ராஜேஸ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா். இதில் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com