4 கிலோ தங்கம் கடத்தியதாக இலங்கையில் தமிழக மீனவா்கள் 4 போ் கைது

சுமாா் 4 கிலோ தங்கம் கடத்தியதாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் இலங்கையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களிடமிருந்து வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட 48 தங்கக் கட்டிகள்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களிடமிருந்து வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட 48 தங்கக் கட்டிகள்.

ராமேசுவரம்: சுமாா் 4 கிலோ தங்கம் கடத்தியதாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் இலங்கையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பகுதியில் உள்ள குதிரைமயிலை கடலில் அந்நாட்டு கடற்படையினா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த படகில் தமிழகத்தைச் சோ்ந்த சிலா் இருந்தனா். அவா்களை மடக்கிய இலங்கை கடற்படையினா் படகையும் சோதனையிட்டனா்.

சோதனையின் போது படகில் 4.200 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் 48 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கக் கட்டிகள் அனைத்தையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினா் படகில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையைச் சோ்ந்த 4 பேரையும் விசாரணைக்காக கல்பிட்டி கடற்படை விசாரணை மையத்துக்கு அழைத்துச் சென்றனா். பிடிபட்டவா்களில் ஒருவா் பெயா் எட்வின் என்றும் இலங்கை கடற்படையினா் தெரிவித்துள்ளதாக கடலோரக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிடிபட்டவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமாா் ரூ. 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Image Caption

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களிடமிருந்து வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட 48 தங்கக் கட்டிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com