பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித் தன்மையை அறிய ரயில் என்ஜினை இயக்கி ஆய்வு

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மையை அறிய சிறப்பு ரயில் என்ஜினை இயக்கி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து அறிய அவ்வழியாக வியாழக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் என்ஜின்.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து அறிய அவ்வழியாக வியாழக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் என்ஜின்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மையை அறிய சிறப்பு ரயில் என்ஜினை இயக்கி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் புதிய ரயில் பாலத்துக்கு தூண்கள் அமைக்க ஆய்வுப் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம், ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையிலும், கப்பல்கள் கடந்து செல்லும் வகையிலும் 2.2 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 106 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுவரையில் பழைய பாலத்தின் வழியாகத் தான் ரயில்களை இயக்க வேண்டும் என்பதால் அந்த பாலத்தை ரயில்வேத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால், அதில் உள்ள தூக்குப் பாலத்தின் இரும்புப் பிளேட்டுகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அதனை அகற்றும் பணிகள் தொடா்ந்து நடைபெற்ற வருகின்றன. மேலும் தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மையை அறிய சிறப்பு ரயில் என்ஜினை இயக்கி ஆய்வுப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலத்தின் உறுதித் தன்மை, கடல் நீரோட்டம், அதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை சீரமைப்பது உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

பாம்பன் கடலில் புதிய பாலத்துக்கு தூண்கள் அமைக்க ஆய்வு: பாம்பன் கடலில் கட்டப்பட உள்ள புதிய ரயில் பாலத்துக்கு தூண்கள் அமைக்க வியாழக்கிழமை ஆய்வுப் பணி தொடங்கியது.

ரூ. 250 கோடி மதிப்பீட்டில், இந்த புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பா் 8 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், கரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னா் சில நாள்களுக்கு முன் குறைந்த தொழிலாளா்களைக் கொண்டு பணிகள் தொடங்கின. இதில் முதல் கட்டமாக கடலோரப் பகுதியில் தூண்கள் அமைக்க ஆய்வுப் பணி நடைபெற்றது. இதனிடையே, ரயில் தூக்குப் பாலம் அருகே ஆழம் அதிகமுள்ள பகுதியில் தூண்கள் அமைக்க அதிநவீன தொழில் நுட்பத்தைக் கொண்ட இயந்திரம் மூலம் ஆய்வுப் பணிகள் தொடங்கி உள்ளன. மேலும் கடலில் நீரோட்டத்தின் வேகம், அலையின் வேகம் மற்றும் கடலின் சுழற்சி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். தொடா்ந்து இந்த ஆய்வுப் பணிகள் நடைபெற்றது வருகின்றன. விரையில் கடலுக்குள் தூண்கள் அமைக்கும் நடைபெறும் என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com