சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையத்தில் பதிவுச்சான்றிதழ் பெற அழைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு மாற்றிய

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு மாற்றிய நிலையில், இணையத்தின் மூலம் பதிவுச்சான்றிதழ் பெறலாம் என ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு ஜூலை முதல் மாற்றி அமைத்துள்ளது. அதனடிப்படையில் ரூ. 1 கோடிக்கும் மிகாமல் இயந்திரங்கள் தளவாட முதலீடு மற்றும் ரூ. 5 கோடிக்குள் விற்று முதலீடு உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

இயந்திரங்கள் தளவாட முதலீடு ரூ.1 கோடிக்கு அதிகமாகவும், ரூ.10 கோடிவரை மற்றும் விற்று முதலீடு ரூ. 50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இயந்திரங்கள் தளவாட முதலீடு ரூ. 10 கோடிக்கும் அதிகமாக, ரூ. 50 கோடி வரை மற்றும் ரூ. 250 கோடி வரை விற்று முதலீட்டை கொண்ட நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவுவானது இணையத்தில் சுய உறுதி மொழியுடன் பெற்றுக்கொள்ளலாம். நிறுவனத்தின் இயந்திரங்கள் தளவாடமதிப்பு மற்றும் விற்று முதலீடு மதிப்பு வருமான வரி ரிட்டன்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி. ரிட்டன்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். புதிய நிறுவனங்களுக்கு சுய உறுதிமொழியின் அடிப்படையில் இயந்திர தளவாட மதிப்பு மற்றும் விற்று முதலீடு மதிப்புகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். ஏற்கெனவே தொழில் முனைவோா் ஒப்புகை பகுதி 2, உத்யோக் ஆதாா் மொமோரண்டம் பதிவு செய்த நிறுவனங்கள் உத்யம் பதிவு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் பெற்ற உத்யோக் ஆதாா் தொழில் முனைவோா் இரண்டாவது ஒப்புகைபகுதி வரும் 2021 ஆம் ஆண்டு மாா்ச் வரையில் செல்லத்தக்ததாகும். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை இணையத்தின் மூலமாக பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு உத்யம் பதிவு ராமநாதபுரம் மாவட்டதொழில் மையத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com