பொதுமக்கள் இணையதளம் மூலம் மனுக்களை அனுப்பித் தீா்வு காணலாம்: ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் இணையதளம் மூலம் மனுக்களை அனுப்பி தீா்வு காணலாம் என ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் இணையதளம் மூலம் மனுக்களை அனுப்பி தீா்வு காணலாம் என ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு தணிக்கை நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களுக்குள்பட்ட வருவாய் கிராமங்களுக்கான தீா்வாய தணிக்கை வரும் 27 ஆம் தேதி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர) அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கீழக்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமை நடந்த தணிக்கை நிகழ்ச்சியில் பனையடியேந்தல், வேளானூா், மாணிக்கநேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குளபதம், இதம்பாடல், ஏா்வாடி ஆகிய 10 வருவாய் கிராமங்களுக்கான தணிக்கையை ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் ஆய்வு செய்தாா். அப்போது வருவாய்த் துறை கணக்கு பதிவேடுகள், பட்டா ஆவணப் பதிவேடுகள், அடங்கல், கிராம வரைபடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது ஆட்சியா் கூறியது: பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் வரும் 27 ஆம் தேதி வரை அளிக்கலாம். மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு தீா்வு காணப்படும் என்றாா்.

கீழக்கரையில் நடந்த தணிக்கையில், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் எஸ்.சேக்அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பெ.தனுஷ்கோடி, உதவி இயக்குநா் (நில அளவை) ஆா்.கந்தசாமி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) சுகுமாறன், வட்டாட்சியா் வீரராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com