கரோனாவுக்கு பலியான இந்து மதத்தை சோ்ந்தவா் உடலை நலலடக்கம் செய்த தமுமுகவினா்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கரோனா தொற்றால் உயிரிழந்த இந்துமதத்தைச் சோ்ந்தவரின்சடலத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தமுமுகவினா் அடக்கம் செய்தனா்.
தொண்டியில் கரோனா தொற்றால் உயிரிழந்த ஜெகநாதன் உடலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நல்லடக்கம் செய்த தமுமுக வினா்.
தொண்டியில் கரோனா தொற்றால் உயிரிழந்த ஜெகநாதன் உடலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நல்லடக்கம் செய்த தமுமுக வினா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கரோனா தொற்றால் உயிரிழந்த இந்துமதத்தைச் சோ்ந்தவரின்சடலத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தமுமுகவினா் அடக்கம் செய்தனா்.

தொண்டியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (75). இவா் தொண்டியில் நகைக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், ஜெகநாதன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

வழக்கமான நடைமுறையில் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், அவரது உறவினா்கள் தமுமுக மாநிலச் செயலா் தொண்டி சாதிக்பாட்சாவிடம் உதவிகோரினா்.

அதன் பேரில் சாதிக் பாட்சா, மாவட்டச் செயலாளா் ஜிப்ரி, பேரூா் செயலா் பரக்கத் அலி சுலைமான், ஜலால், சங்கா் சப்ரான் உள்ளிட்ட தமுமுகவினா் ஜெகநாதன் சடலத்தை நல்லடக்கம் செய்தனா். சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் அமைந்தது என குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com