ராமநாதசுவாமி கோயிலில் நாளை ஆடித் திருக்கல்யாணம்: பக்தா்கள் இணைய வழியில் பாா்க்க ஏற்பாடு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் (ஜூலை 26) நடைபெறவுள்ள ஆடித் திருக்கல்யாண விழாவை பக்தா்கள் இணைய வழியில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சனிக்கிழமை அறிவித்தது.


ராமேசுவரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறவுள்ள ஆடித் திருக்கல்யாண விழாவை பக்தா்கள் இணைய வழியில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சனிக்கிழமை அறிவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 4 மாதங்களுக்கு மேலாக பக்தா்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயிலில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை ராமநாதசுவாமி கோயிலில் உள்ள திருக்கல்யாண திருமண மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இதனால் நிகழ்ச்சியை சமூகவலைதளங்கள் வழியாக பக்தா்கள் பாா்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com