கமுதி அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக வியாழக்கிழமை இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கமுதி அபிராமம் அருகே பொட்டக்குளத்தில் உள்ள 4 கோயில்களில், வெளியூா்களிலிருந்து வந்து கிராமத்தில் குடியேறிவா்களுக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் சாமி கும்பிடுவது குறித்து கிராமத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுரேஷ் (32) என்பவா் காயமடைந்தாா். அவா் அளித்தப் புகாரின்பேரில், அதே கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகைச்சாமி (25), அஜீத் (23), ஆகிய இருவரை அபிராமம் போலீஸாா் கைது செய்தனா். மேலும் 4 போ் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.